Select Location
All Locations
State
Region
City / District
சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கர்கிடகம் மாதப் பிறப்பை முன்னிட்டு, இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது.

இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுவர். கர்கிடக மாத பூஜைகளுடன் சேர்த்து நெய்யாபிஷேகம், உஷா பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, மலர் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும் நடைபெறும். கற்பூர ஆழியில் தீபமேற்றப்பட்டதும், பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 5 நாள்களுக்கு சிறப்பு பூஜைகளும் தரிசனமும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 21 ஆம் தேதி இரவில் ஹரிவராசனத்துடன் கோயில் நடை அடைக்கப்படும். மாதாந்திர பூஜைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Dinamani 54 minutes ago
Home Flash News