மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை பறித்து, கல்வித் துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. நீட் முறைகேடுகளையும், வினாத்தாள் கசிவுகளையும் தடுக்க முடியாத மத்திய கல்வி அமைச்சகம், இப்போது பல்கலைக்கழகங்களைச் சீரழிக்கப் பார்க்கிறது. மோடி அரசும், கல்வி அமைச்சரும் நம் மாணவர்களின் கனவுகளோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.