கட்டாயம் பார்க்க வேண்டும்... ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டிய கமல் ஹாசன்!
நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் தி ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார். கிரேக்க காவியமான ஹோமரின் ’தி ஒடிசி’ கவிதையைத் தழுவி இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் ஒடிசி திரைப்படத்தை மிகச் சவாலாக முழுமையாக ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கினார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஜூலை 17ஆம் தேதி இப்படம் வெளியானது. தொழில்நுட்ப ரீதியாக ஆச்சரியப்படுத்தினாலும் திரைக்கதையால் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் இப்படம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஹோமர் கனவு கண்டார். நோலன் முடிக்க நினைத்தார். நான் மனதாரப் பாராட்டுகிறேன். சினிமாவின் குழந்தைகளே, இந்தத் திரைப்படம் காலம் கடந்து நிற்கும். கட்டாயம் பாருங்கள்! தி ஒடிசி உலகம் முழுவதும் தனது காவியப் பயணத்தைத் தொடரும் வேளையில், அதற்கான எனது புகழ் கவிதை இந்தியாவின் திரையரங்குகளில் பார்வையாளர்களைச் சென்றடையவுள்ளது. அதை விரைவில் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.