Select Location
All Locations
State
Region
City / District
காமகோடி பற்றி சர்ச்சை பேச்சு: பிரியங்கா காந்திக்கு எதிர்வினை

காமகோடி பற்றி சர்ச்சை பேச்சு: பிரியங்கா காந்திக்கு எதிர்வினை

புதுடெல்லி: ஐஐடி உயர் ​கல்வி நிறுவன இயக்​குநர் காமகோடியை, கோமிய நிபுணர் என்று கூறியதற்கு அதிருப்தி தெரி​வித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரி​யங்கா காந்தி வதேரா​வுக்கு நாட்டிலுள்ள 215 கல்​வி​யாளர்​கள் கடிதம் எழுதியுள்ளனர். மக்​களவை​யில் நேற்று முன்​தினம் ‘பொதுத் தேர்​வு​கள் (முறைகேடு​கள் தடுப்​பு) திருத்த மசோ​தா- 2026’ மீதான விவாதம் நடை​பெற்​றது. விவாதத்​தில் கலந்​து​கொண்டு பிரி​யங்கா காந்தி பேசும்​போது, “வினாத்​தாள் கசிவு தொடர்​பான பிற குற்றங்களுக்கான தண்​டனையை அதி​கரிப்​பது​தான் மசோதாவின் முக்​கிய நோக்​கம். வினாத்​தாள் கசிவை தடுக்க அமைக்​கப்​பட்​டுள்ள புதிய நிபுணர்​கள் குழு​வில் பல உறுப்பினர்கள் இடம்​பெற்​றுள்​ளனர். பிரதமர் தனது ஆலோசகர்களை மாற்​றிக்​கொள்ள வேண்​டும் என நினைக்கிறேன்.

இந்​தப் புதிய நிபுணர்​கள் குழு​வில் முன்னாள் புல​னாய்​வுப் பிரிவுத் தலை​வர் (தபன் தேகா), ஒரு தகவல் தொழில்​நுட்ப நிறுவன உரிமை​யாளர் (நந்​தன் நிலேக​னி), ஒரு ‘மாட்​டுக் கோமிய நிபுணர்’ (காமகோடி) ஆகியோர் உள்​ளனர். இவர்​களுக்கு கல்​வியைப் பற்றி என்ன தெரி​யும் ?” என்று கேள்வி எழுப்​பி​னார். பிரி​யங்கா காந்​தி, சென்னை ஐஐடி உயர்​கல்வி நிறுவன இயக்​குநர் காமகோடியைத்​தான் ‘கோமிய நிபுணர்’ என்று தனது பேச்​சில் குறிப்​பிட்​டிருந்​தார். இந்​நிலை​யில் 215 கல்வியாளர்​கள் பிரி​யங்கா காந்​தி​யின் பேச்​சுக்கு அதிருப்தி தெரிவித்து கடிதம் ஒன்றை நேற்று எழு​தி​யுள்​ளனர்.

அந்​தக் கடிதத்​தில் கூறி​யுள்​ள​தாவது: சென்னை ஐஐடி இயக்​குநர் பேராசிரியர் காமகோடியை கோமிய நிபுணர் என்று தெரி​வித்து நீங்​கள் வெளி​யிட்ட கருத்து ஏமாற்​றம் அளிக்​கிறது. இதற்​காக எங்​களது அதிருப்​தி​யைத் தெரி​வித்து இந்தக் கடிதத்தை எழு​தி​யுள்​ளோம். அது கிண்​டலாகக் கூறப்பட்டதா அல்​லது அரசி​யல் சொல்​லாடலாக இருந்​ததா என்பதைப் பொருட்​படுத்​தாமல், அத்​தகைய சித்​தரிப்பு ஒரு தனி நபர் மீதான விமர்​சனம் என்​பதை விட அதை​யும் தாண்​டிய கவலைகளை எழுப்​பு​கிறது.


Hindu Tamil 53 minutes ago
Home Flash News