Select Location
All Locations
State
Region
City / District
மக்கள் பணம் எங்கே? – மாணிக்கம் தாகூர் கேள்வி?

மக்கள் பணம் எங்கே? – மாணிக்கம் தாகூர் கேள்வி?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்கள் பணம் எங்கே பிரதமர் நரேந்திர மோடி அவர்களே? ZERO ACCOUNTABILITY பொதுமக்களின் வியர்வைச் சிந்திய பணமும், அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பும் இணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த PMCARES நிதி! 2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.909.64 கோடி நன்கொடை உட்பட ரூ.6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் வெறும் ரூ.439.38 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, மீதம் ரூ.6,283.68 கோடி கையிருப்பில் உள்ளது.

2022-23க்கு பின் audit statements வெளியிடப்படாதது ஏன்? அமைச்சர்கள் இருக்கும் அமைப்பிற்கு RTI பொருந்தாது எனக் கூறித் தப்பிப்பது ஏன்? ஒன்றிய அமைச்சர்களே இதன் அறங்காவலர்களாக பொறுப்பில் இருக்கும் போது, சட்டப்படி பொது ஊழியர்களான அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்! எனவே, PM CARES நிதி நிச்சயம் RTI வரம்பிற்குள் (Ambit of RTI Act) தான் வருகிறது. மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


News 7 Tamil 1 hour ago
Home Flash News