Select Location
All Locations
State
Region
City / District
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கு முக்கியப் பொறுப்பு: தவெக வட்டாரம் தகவல்

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கு முக்கியப் பொறுப்பு: தவெக வட்டாரம் தகவல்

சென்னை: அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 6 பேருக்கும் மாநில அளவிலான பதவிகளை வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தவெகவில் இணையவிருக்கும் நிகழ்ச்சியில் போது, 6 பேருக்கு இன்று தவெகவில் பொறுப்புகள் வழங்கபடவிருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அதிமுக எம்எல்ஏவாக தேர்வான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவர்களும் தவெகவில் இணைந்தனர். இதுதவிர முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News