Select Location
All Locations
State
Region
City / District
12 இடங்களில் உலகக் கோப்பை போட்டி | ODI WC 2027

12 இடங்களில் உலகக் கோப்பை போட்டி | ODI WC 2027

ஜோகன்னஸ்பர்க்: ஐசிசி 14-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு அக்​டோபர் 4 முதல் நவம்பர் 21 நடை​பெற உள்​ளது. தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடு​கள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்​ளன. தென் ஆப்​பிரிக்​கா​வில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளன. இந்​நிலை​யில் இந்த தொடரின் ஆட்​டங்​கள் 12 இடங்களில் நடை​பெறும் என அறி​விக்க​பட்டுள்ளது. தென் ஆப்​பிரிக்​கா​வில் வாண்​டரர்ஸ் மைதானம் (ஜோகன்​னஸ்​பர்க்), செஞ்​சுரியன் (ஷ்​வானே), நியூலேண்ட்ஸ் மைதானம் (கேப் டவுன்), கிங்​ஸ்​மீட் மைதானம் (டர்பன்), செயின்ட் ஜார்​ஜஸ் பார்க் (கெபெர்​ஹா), மங்​க​வுங் ஓவல் (ப்​ளோம்ஃ​போன்​டைன்), போலண்ட் பார்க் (பார்ல்) பஃபலோ பார்க் (கு-கோம்போ சிட்​டி) ஆகிய 8 இடங்​களில் நடை​பெற இருக்கின்றன.

ஜிம்​பாப்​வே​யில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (ஹராரே), குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (புல​வாயோ), ஃபாலே மோசி-ஓ​வா-துன்யா சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் (விக்​டோரியா ஃபால்​ஸ்) ஆகிய 3 இடங்​களில் நடை​பெற இருக்​கின்​றன. நமீபி​யா​வில் விண்ட்​ஹோக் நகரில் உள்ள நமீபியா கிரிக்​கெட் மைதானத்​தில் போட்​டி நடை​பெற​விருக்​கிறது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News