Select Location
All Locations
State
Region
City / District
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த மக்கள் கிளர்ச்சி -

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த மக்கள் கிளர்ச்சி - பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறையின் பின்னணி

1990-களில் ஜம்மு - காஷ்மீர் மசூதிகளில் நள்ளிரவுகளில் இமாம்களால் சத்தமிட்ட ஒலிபெருக்கிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இங்கு அல்ல; இப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்தும் அட்டூழியங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்று திரளுங்கள் என முசாபராபாத்தைச் சேர்ந்த இமாம்கள் (மத குருமார்கள்) ஒலிபெருக்கியில் மக்களைத் தீவிரமாக அழைக்கிறார்கள்.

கடந்த 1990-களில் இதே மசூதிகளில்தான் இரவு நேரங்களில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும், மதப்பிரச்சாரங்களும், பண்டிட்களுக்கு எதிரான மிரட்டல்களும் விடுக்கப்பட்டு, மக்களை இந்தியாவுக்கு எதிராகப் போராட வைத்தது. ஸ்ரீநகர், பூஞ்ச் மற்றும் எல்லைக்கு அப்பால் உள்ள சலோத்ரி மசூதிகளிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பால், பூஞ்ச் மாவட்டத்தின் பல இளைஞர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றனர். காஷ்மீரில் பண்டிட்களை ஒட்டுமொத்தமாக விரட்டும் வேலையில் இறங்கி, தேசத்துக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஆனால், இப்போது நிலைமை அப்படியே மாறி, பாகிஸ்தானைத் திருப்பி அடித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முசாபராபாத், ரவாலாகோட் ஆகிய பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராகக் கடந்த 2 மாதங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மற்றும் ஈரக்கமின்றி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்துக்கு என்ன காரணம்? பாகிஸ்தானின் பிரதான நகரங்களுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்துதான் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. யெழுத்தானது. ஆனால், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கியே உள்ளது. கடுமையான பணவீக்கம், தொடர் மின்வெட்டு, கோதுமை மாவு பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு ஆகியவற்றால் உள்ளூர் மக்கள் கொதிப்படைந்தனர். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பாகிஸ்தான் அரசுக்கும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்திற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தம் கை

இதனால் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்த மக்களை ஜம்மு ‘காஷ்மீர் ஜாயின்ட் அவாமி ஆக்சன் கமிட்டி’ என்ற அமைப்பு ஒன்று திரட்டி, கடந்த ஜூன் மாதத்திலிருந்து ரவாலாகோட், முசாபராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 53 இடங்களுக்களில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. இதில் 1947-இல் இந்தியாவில் இருந்து வந்த அகதிகளுக்காக 12 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வெளியே வசிக்கும் அகதி வாக்காளர்கள் வாக்களிப்பது, உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் எனக் கூறி, இந்த 12 இடங்களை ரத்து செய்யுமாறு ‘ஜேகேஜேஏஏசி’ வலியுறுத்தியது. ஆனால், ‘ஜேகேஜேஏஏசி’ விடுத்த கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் பாகிஸ்தான் அரசு தேர்தல் பணியைத் தொடங்கியது. இதையடுத்து, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பிரமாண்ட பேரணியை ‘ஜேகேஜேஏஏசி’ அமைப்பு முன்னெடுத்தது. இளைஞர்கள் குறிவைத்து கொலை பல்வேறு நகரங்களில் நடந்த இந்தப் பேரணியை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் கொடூரமான அடக்குமுறையையும், துப்பாக்கி சூட்டையும் நடத்தியது. ரவாலாகோட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ‘ஜேகேஜேஏஏசி’ அமைப்பின் தலைவரது சகோதரரும், பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஒசாமா ஜலீல் கொல்லப்பட்ட பின்பு போராட்டம் தீவிரமடைந்தது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News