Select Location
All Locations
State
Region
City / District
தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் வெற்றி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடிப்படை காப்பீடு திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்வு. குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூ.12 இலட்சம் வரை வழங்கப்படும். அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். தமிழக அரசு ஊழியர்களுக்கு 2,992 வகையான சிகிச்சைகள் மற்றும் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.838 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News