FSSAI அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் 11 மது வகைகளை விற்க தடை விதித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்
சென்னை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அறிவுறுத்தலின்படி டாஸ்மாக் கடைகளில் 11 மதுபான வகைகளை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை கடைகளில் விற்பனை செய்ய கூடாது என உத்தரவிட்டுள்ளது.
நான்காவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில், FSSAI உரிமம் எண் 100130442001294-ஐக் கொண்ட M/s என்ரிகா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் (M/s Enrica Enterprises Private Limited) நிறுவனத்தின் உரிமம் பெற்ற வளாகத்தில், FSSAI-இன் தெற்கு மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த மத்திய நியமிக்கப்பட்ட அதிகாரி 11.08.2026 அன்று ஆய்வு மேற்கொண்டதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் தெரிவித்துள்ளார்.