கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய திமுக வலியுறுத்தல்
சென்னை: கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், கர்நாடகாவில் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல் என்று மனோஜ் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து தெளிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு இந்த கொலையை கண்டிக்க வேண்டும். உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.Geographic Reference