Select Location
All Locations
State
Region
City / District
அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: ``தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அமைச்சர் ரமேஷ்

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: ``தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அமைச்சர் ரமேஷ்

கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சட்டமன்றத்தில் ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தேவையற்ற மற்றும் அவைக்குறிப்பிற்கு மாறான வார்த்தைகள் இடம்பெறும்போது, மரபுப்படி அவைத் தலைவரால் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் ஜனநாயகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவை நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை எழுப்புவதைத் தவிர்த்து, கூச்சலிடுவதிலும், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.


24 News 1 hour ago
Home Flash News