Select Location
All Locations
State
Region
City / District
TN Assembly: "அன்பில் மகேஷின் பள்ளிக் கல்வித்துறை எவ்வளவு லஞ்சம் வாங்கியது தெரியுமா?" - மரிய வில்சன் ஆவேசம்|

TN Assembly: "அன்பில் மகேஷின் பள்ளிக் கல்வித்துறை எவ்வளவு லஞ்சம் வாங்கியது தெரியுமா?" - மரிய வில்சன் ஆவேசம்|

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தெரிந்துக்கொள்ளுங்கள்!

திமுக எதிர்க்கட்சியாக இருப்பதற்கு கூட்டணி கட்சிகள்தான் காரணம். காங்கிரஸூம் ஐ.யூ.எம்.எல் உம் விசிகவும் இருந்ததால்தான் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு கிடைத்தது.

- ஆதவ் உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் எங்களின் கூட்டணிக் கட்சிகளை விட்டு விட்டு ஆட்சி அமையுங்கள்.

கே.என்.நேரு எங்களை விட்டுவிட்டு அவர்கள் தனியாக நின்றிருக்கிறார்கள். அவர்களால் வெல்ல முடியவில்லை. திமுக இல்லாமல் அவர்களால் வெல்ல முடியாது.

பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம்தான் உங்களுக்கு இத்தனை எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் கிடைத்திருக்கிறார்கள். - தாரகை

'அன்பில் மகேஷ் வேண்டுமானால் அவதூறு வழக்கு தொடுக்கட்டும்! நானும் கல்லூரி நடத்தி வருகிறேன். முன்னாள் அமைச்சர்களும் கல்லூரி நடத்தி வருகிறார்கள். அரசு கலைக் கல்லூரிகளில் NAAC சான்று கூட வாங்காமல் இருக்கிறார்கள். அது எப்படி தரமான கல்லூரியாக இருக்கு முடியும்? அதனால்தான் தனியார் கல்லூரிகள் சிறந்து விளங்குகின்றன. 

பள்ளிக் கல்வித்துறையில் எனக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அந்தத் துறையில் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கிறது. அதற்கு நானே சாட்சி. தி.நகரில் எந்த இடத்தில் எவ்வளவு காசு வாங்கினீர்கள்? சிறுபான்மை நிறுவனங்களிடம் எவ்வளவு வாங்கினீர்கள் என எல்லாம் தெரியும். முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் இங்கே. அவர் வேண்டுமானால் அவதூறு வழக்கு தொடுக்கட்டும்.

'கன்னிப் பேச்சு வேண்டாமே...' சௌமியா - உறுப்பினர்களின் முதல் பேச்சை கன்னிப் பேச்சு என குறிப்பிட வேண்டாம். அறிமுக உரை என குறிப்பிடலாம். லதா : 'கன்னிப் பேச்சு' என குறிப்பிடும் வழக்கத்தை மாற்ற வேண்டும். 'கன்னிப் பேச்சு' என்பது ஆணாதிக்கத்தனமாக இருக்கிறது.


24 News 1 hour ago
Home Flash News