Select Location
All Locations
State
Region
City / District
LIVE
உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்​தில் மொத்​தம் 403 உறுப்பினர்களை கொண்ட சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்​தில் தேர்​தல் நடக்க உள்​ளது. அங்கு தேர்​தல்களம் இப்​போதே சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில், இந்​தத் தேர்​தலில் வெற்​றிப் பெற்று சமாஜ்​வாதி கட்சி ஆட்​சிக்கு வந்​தால், 'ஸ்ரீ சம்​மான் சம்​ருத்தி யோஜ​னா' (பெண்களுக்​கான கண்​ணி​யம் மற்​றும் செழிப்​புத் திட்​டம்) என்​கிற திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்​றும், இதன் கீழ் பெண்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.40,000 வழங்​கப்​படும் என்​றும் அக்​கட்சி அறிவித்துள்​ளது. மேலும் 12-ம் வகுப்பு முடித்த பெண்​களுக்கு மடிக்​கணினி வழங்​கப்​படும் என்​றும் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் கூறும்​போது, ''ஸ்ரீ சம்மான் சம்​ருத்தி யோஜனா என்​பது, மக்​கள் தொகை​யில் 50% பங்கு வகிக்​கும் பெண்​களுக்கு முழு​மை​யான சுதந்​திரத்தை வழங்கு​வதற்​கான ஒரு உறு​தி​மொழி. இந்த தொகை எதிர்காலத்தில் மேலும் அதி​கரிக்​கப்​படும்'' என்​றார். உத்தர பிரதேசத்தில் 60 வயது பெண்​கள் அரசு பேருந்​துகளில் முற்றி​லும் இலவச​மாக பயணம் செய்​யும் ’லோக் மாதா அஹில்யாபாய் மத்​ரிசக்தி யாத்​ரா’ என்​கிற திட்​டத்தை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் லக்​னோ​வில் நேற்று தொடங்கி வைத்​தார். இத்​திட்​டத்​தின் மூலம் தின​மும் 84,438 பெண்​கள் பயனடைவார்கள் என கூறப்​பட்​டுள்​ளது. இத்​துடன் இன்று தொடங்​கும் ‘ரக்‌ஷா பந்​தன்’ பண்​டிகைக்​காக ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய 3 நாட்​கள் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் அனைத்து பெண்​களும் இலவச​மாக பயணம் செய்​ய​லாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், பெண்​களு​டன் ஆண் ஒரு​வரும் இலவச​மாக பயணம் செய்​ய​லாம் என தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.


Hindu Tamil 58 minutes ago
Home Flash News