‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?
ஒன்டாரியோ ஏரியின் 400 ஆண்டுகள் பழமையான பெயரை மாற்றிய ட்ரம்பின் உத்தரவுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன.
இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றி, அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்த ஏரியின் நடுவில்தான் அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லை இருக்கிறது. அமெரிக்காவின் பக்கம், இந்த ஏரி நியூயார்க் மாநிலம் பக்கம் உள்ளது. கனடாவின் பக்கம், ஒன்டாரியோ மாகாணத்தில் இருக்கிறது.
இதனால், இந்த ஏரியையொட்டி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் (அப்போது கனடா பிரிட்டனுக்குக் கீழ் இருந்தது) 1909-ஆம் ஆண்டு எல்லை நீர் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் பரஸ்பர நாடுகளைப் பாதிக்கும் வகையில், அதன் நீரோட்டத்தை மாற்றவோ, கட்டுப்படுத்தவோ கூடாது. நாடுகளைப் பாதிக்கும் வகையில் அந்த ஏரியின் நீரை மாசுப்படுத்தக் கூடாது
கனடாவின் ரியாக்ஷன் ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... “ ‘ஒன்டாரியோ ஏரி’ என்ற பெயர் ‘ஒன்டாரி இயோ’ எனும் வெண்டாட் பழங்குடியின மொழியிலிருந்து வந்ததாகும். அதற்கு ‘மிகவும் அழகான ஏரி, மிகப்பெரிய ஏரி’ என்று பொருள்.