Select Location
All Locations
State
Region
City / District
`தீபாவளி, பொங்கல் நாள்களில் ஒருநாளாவது லீவ் கொடுங்க' - டாஸ்மாக் ஊழியர்களுக்காக பேசிய சௌமியா அன்புமணி

`தீபாவளி, பொங்கல் நாள்களில் ஒருநாளாவது லீவ் கொடுங்க' - டாஸ்மாக் ஊழியர்களுக்காக பேசிய சௌமியா அன்புமணி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மகளிர், மதுவிலக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி உரையாற்றினார். அவரின் உரையில், ``பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், கிராமப்புறங்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. எனவே, கிராமப்புறங்களுக்கு அதிக அளவில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும்.

அவற்றில் பெண்களை நடத்துநராகவும், ஓட்டுநராகவும் நியமித்து அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை 1989-ல் அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டுவந்தார்.


Nakkeeran 50 minutes ago
Home Flash News