Select Location
All Locations
State
Region
City / District
இந்​திய ஜிடிபி குறித்து பாஜக பெருமிதம்: வேலைவாய்ப்புகள் எங்கே என காங்​. கேள்வி

இந்​திய ஜிடிபி குறித்து பாஜக பெருமிதம்: வேலைவாய்ப்புகள் எங்கே என காங்​. கேள்வி

புதுடெல்லி: நடப்பு 2026-27 நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் (ஏப்ரல் - ஜூன்) இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்​துள்​ள​தாக மத்​திய அரசு வெளியிட்டுள்ள அதி​காரப்​பூர்வ தரவு​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து ஆளும் பாஜக மற்​றும் எதிர்க்​கட்​சி​யான காங்​கிரஸ் இடையே கடுமை​யான அரசி​யல் விவாதம் எழுந்​துள்​ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் ரவிசங்​கர் பிர​சாத் டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பொருளா​தா​ரச் சவால்களுக்கு மத்​தி​யிலும் இந்​தியா 7.8 சதவீத வளர்ச்​சியை எட்டியுள்​ளது. பிரதமர் நரேந்​திர மோடி​யின் திறமை​யான பொருளா​தார மேலாண்​மையே இந்​தச் சாதனைக்​கு காரணம்” என்​றார். இதுகுறித்து காங்​கிரஸ் கட்​சி​யின் செய்​தித் தொடர்பாளர் பவன் கேரா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வெறுமனே ஜிடிபி எண்களை மட்​டும் வைத்து நாட்​டின் உண்மையான பொருளா​தார நிலையை மதிப்​பிட முடி​யாது.

மத்​திய அரசு குறிப்​பிட்​டுள்ள இந்த 7.8 சதவீத வளர்ச்​சி​யால் நாட்டின் இளைஞர்​களுக்​கும், விவ​சா​யிகளுக்​கும் என்ன பயன் கிடைத்​தது? நாட்​டின் உற்​பத்​தித் துறை, சிறு, குறு தொழில்​கள் மற்​றும் முறை​சாரா துறை​களின் நிலை என்ன? நாட்​டின் 80% மக்கள் இன்​னும் இலவச ரேஷன் தானி​யங்​களை நம்பி வாழும் நிலை​யில், இந்த வளர்ச்சி யாருக்​கானது? ஜிடிபி உயர்வு என்​பது தேசிய உற்​பத்​தியை மட்​டுமே குறிக்​குமே தவிர, வேலை​வாய்ப்​பையோ அல்​லது ஊதிய உயர்​வையோ குறிக்​காது. இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்​சியை ‘உறு​தி​யான வளர்ச்​சி’ என பாஜக முன்​னிறுத்தும் அதே வேளை​யில், சாதாரண மக்களின் வாழ்​வா​தா​ரத்​தில் அது எந்த மாற்​றத்​தை​யும் ஏற்படுத்தவில்​லை என காங்​கிரஸ்​ குற்​றம் சாட்டியுள்ளது.


Hindu Tamil 45 minutes ago
Home Flash News