Select Location
All Locations
State
Region
City / District
LIVE
கதாநாயகனாக பாரதிராஜா நடித்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி!

கதாநாயகனாக பாரதிராஜா நடித்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி!

மறைந்த இயக்குநர் பாரதிராஜா இறுதியாக நடித்த புலவர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் இமயம் எனப் புகழப்படும் பாரதிராஜா, ஜூன் 10 ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரை இல்லத்தில் காலமானார்.

சென்னையில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு அருகே உள்ள வத்தலக்குண்டு கொண்டு செல்லப்பட்டு காட்ரோடு தோப்பில் அரசு மரியாதையுடம் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்தாலும் இறுதியாக பாரதிராஜா கதைநாயகனாக நடித்த புலவர் திரைப்படம் தற்போது செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக மெய்யாண்டவர் என்கிற கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரங்களில் ரேய்ச்சல் ரேபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை இயக்குநர் முருகைய்யா இயக்கியுள்ளார். நகைச்சுவை பாணியில் இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.


Dinamani 1 hour ago
Home Flash News