Select Location
All Locations
State
Region
City / District
LIVE
`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி நிலவிய இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, ஆட்சி மாற்றத்திற்குப் பின் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்து சட்டசபையில் அறிவித்தது.

முந்தைய ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அதே வேளையில் அப்பகுதியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு முடிவு செய்திருந்தது.

இந்த நிலங்களில் அமைந்துள்ள கிளினிக், கடைகள், ஆழ்துளைக் கிணறுகள், கம்பவுண்ட் சுவர்கள் மற்றும் வேம்பு, தென்னை, பனை, மா போன்ற மரங்களுக்கும் தகுந்த இழப்பீட்டுத் தொகையைச் சிப்காட் மேலாண்மை இயக்குநர் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக் கையகப்படுத்துதல் தொடர்பான வரைபடங்கள் மற்றும் விவரங்கள் காஞ்சிபுரம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேலை நாட்களில் நேரில் சென்று ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டிருக்கிறது.


Vikatan 1 hour ago
Home Flash News