South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

4 ஆயிரம் பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு கண்காட்சி: கொளத்தூரில் நாளை துவங்குகிறது

4 ஆயிரம் பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு கண்காட்சி: கொளத்தூரில் நாளை துவங்குகிறது

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பிரமாண்டமாக கொலு வைத்து கண்காட்சி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் கொளத்தூர் ஜிகேஎம் காலனி 36வது தெருவில் உள்ள நவராத்திரி கோயிலில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொலு கண்காட்சி வைப்பது வழக்கம். இந்தாண்டு நான்காயிரம் பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சமாக ஆன்மிக நிகழ்வுகளை குறிக்கும் வகையில், சிவன் மற்றும் பார்வதியை விநாயகர் சுற்றிவந்து மாம்பழத்தை பெற்று கொள்வது போன்றும், இதனை பார்த்து முருகர் கோபித்து கொண்டு செல்வது போன்றும் மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று சிவபெருமானுக்கு விநாயகர் மற்றும் முருகர் சேர்ந்து அபிஷேகம் செய்வது போன்ற காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொலு கண்காட்சி நாளை தொடங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது‌. தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கொலு கண்காட்சி நடைபெறுகிறது. கொலு கண்காட்சியை ஆர்ஆர்ஆன்மீக அறக்கட்டளையின் சார்பில் டி.ஆர்.குணசேகர், டி.ஆர்.வேலுமணி, எல்‌.கஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். கொலு கண்காட்சியை புண்ணியகோட்டி மதுரை முத்து சுவாமிகள் நாளை காலை 9 மணி அளவில் கொடியேற்றி துவக்கி வைக்கிறார்.

📍 chennai
📰 Dinakaran Tamil
🕒 20 days ago

Related News

சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது
சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡