South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

மேற்கத்திய இசை, நடன நிகழ்ச்சி நடத்தினால் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

மேற்கத்திய இசை, நடன நிகழ்ச்சி நடத்தினால் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நவராத்திரி கொண்​டாட்​டத்​தின்​போது மேற்​கத்​திய இசை நிகழ்ச்​சிகள், கேலிக்​கூத்​துகளு​டன் கூடிய திரைப்பட நடன நாட்​டிய நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டால் போலீ​ஸார் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பாரத் இந்து முன்​னணி மாநிலச் செய​லா​ளர் கே.டில்​லி​பாபு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தீமைக்கு எதி​ரான நன்​மை​யின் வெற்​றியைக் கொண்​டாடும் வகை​யில் நவராத்திரி, ஆயுத​பூஜை விமரிசை​யாக கொண்​டாடப்​படு​கிறது.

முன்​பெல்​லாம் நவராத்​திரி கலை நிகழ்ச்​சிகளாக ஆன்​மிகம் சார்ந்த சொற்​பொழி​வு​கள், முப்​பெரும் தேவியரின் புராணங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட நடன, நாட்​டி​யங்​கள், இசைக் கச்​சேரி​கள் நடத்​தப்​படும்.

ஆனால், தற்​போது கலாச்​சார சீரழிவு காரண​மாக பணம் சம்​பா​திக்​கும் நோக்​குடன் சென்​னை​யில் பல்​வேறு தனி​யார் விடு​தி​களில் விருந்து நிகழ்​வு​கள், திரைப்பட ஆடல், பாடல் நிகழ்ச்​சிகளு​டன் நவராத்​திரி பூஜை விழாக்​கள் நடத்​தப்​படு​கின்​றன.

இதற்​காக பார்​வை​யாளர்​களிடம் தனி​யாக கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​படு​கிறது. குறிப்​பாக, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் மாலில் துர்​காதேவி சிலையை வைத்து திரைப்​படப் பாடல்​களு​டன் கூடிய நடன நிகழ்ச்​சிகள், பாப் பாடல்​களு​டன் கூடிய இசை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன.

இது​போன்ற நிகழ்​வு​களுக்கு அனு​மதி தரக்​கூ​டாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கோரி​யிருந்​தார். நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்பு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​ஸன், ‘‘நவ​ராத்​திரி கொண்​டாட்​டத்​தில் கர்​பா, தாண்​டியா நடனங்​கள் ஓர் அங்​கம் என்​றாலும், மது​பானம் பரி​மாறு​வது, மேற்​கத்​திய இசை​யுடன் கூடிய நிகழ்ச்​சிகளுக்கு போலீ​ஸார் அளித்​துள்ள அனு​ம​தியை ரத்து செய்ய வேண்​டும்’’ என்று கோரி​னார்.

இதையடுத்து நீதிப​தி, ‘‘இது​போன்ற நிகழ்​வு​களுக்கு போலீ​ஸார் கவன​முடன் அனு​மதி அளிக்க வேண்​டும். நிபந்​தனை​களை மீறி நவராத்​திரி கொண்​டாட்​டத்​தின்​போது மேற்​கத்​திய இசை நிகழ்ச்​சிகள், கேலிக்​கூத்​து, திரைப்பட நடன நாட்​டிய நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டால் போலீ​ஸார் தகுந்​த நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்’’ என்​று உத்​தரவி்ட்​டார்​.

📍 chennai
📰 Hindu Tamil
🕒 13 days ago

Related News

சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது
சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது
சட்ட அமைப்புகளுக்கு எதிராக போராடினால் அரசு வேலை இல்லை: உ.பி. அரசின் புதிய விதிகள் வெளியீடு
சட்ட அமைப்புகளுக்கு எதிராக போராடினால் அரசு வேலை இல்லை: உ.பி. அரசின் புதிய விதிகள் வெளியீடு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡