South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

செவ்வாய் கிரகத்தை நோக்கி ஜப்பான் விண்கலம்..!

செவ்வாய் கிரகத்தை நோக்கி ஜப்பான் விண்கலம்..!

செவ்வாய் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான ஃபோபோஸில் (Phobos) இருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டுவரும் மார்ஷியன் மூன் எக்ஸ்ப்ளோரேஷன் எனப்படும் விண்கலத்தை ஜாக்ஸா எனப்படும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது.

தனேகாஷிமா ஏவுதளத்தில் இருந்து H3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஃபோபோஸை சென்றடையும் என்றும், 2031-ஆம் ஆண்டில் மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் இரண்டு நிலவுகளின் தோற்றம் மற்றும் சூரியக் குடும்பத்தின் ஆரம்பக்கட்டம் குறித்து நடத்தப்பட்டுவரும் ஆய்வுகளுக்கு இந்த மாதிரிகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஃபோபோஸ் நிலவின் மேற்பரப்பு மற்றும் அதற்கு அடியில் 2 சென்டிமீட்டர் ஆழம் துளையிட்டு சுமார் 10 கிராம் அளவில் மாதிரிகள் சேகரிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

📍 Pondicherry
📰 Polimer News
🕒 9 days ago

Related News

“மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்” - மு. வீரபாண்டியன் அறிவிப்பு!
“மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்” - மு. வீரபாண்டியன் அறிவிப்பு!
மீண்டெழுந்த சரத்பவார், அகிலேஷ் யாதவ்: சட்டமேலவை தேர்தலில் நாக்பூர், வாரணாசியை இழந்த பாஜக
மீண்டெழுந்த சரத்பவார், அகிலேஷ் யாதவ்: சட்டமேலவை தேர்தலில் நாக்பூர், வாரணாசியை இழந்த பாஜக
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
⬅ Back
➕ Post Ad
To Ads ➡