South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஐ.நா. சிறப்பு பிரதிநிதியின் தவறான அறிக்கைக்கு இந்தியா பதிலடி

ஐ.நா. சிறப்பு பிரதிநிதியின் தவறான அறிக்கைக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: ஐ.நா-வின் சிறப்பு பிரதிநிதியான பென் சவுல், கடந்த ஜூலை மாதம் தாக்​கல் செய்த அறிக்​கை​யில், மிகவும் தேடப்படும் தீவிர​வாதி​களில் ஒரு​வ​ரான தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் வசித்து வரு​வ​தாகக் குறிப்​பிட்​டிருந்​தார்.

அவரின் இந்​தத் தவறான அறிக்​கைக்கு பதிலடி​யாக ஐ.நா.வுக்கான இந்​திய தூதரக முதன்​மைச் செயலர் ரகு பூரி கூறியுள்​ள​தாவது: தாவூத் இப்​ராஹிம் 2003-ம் ஆண்டு ஐ.நா-வின் தீவிர​வாதி​கள் பட்​டியலில் சேர்க்​கப்​படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்​தி​யாவை விட்டு தப்பி ஓடி​விட்​டார்.

அல்​காய்தா மற்​றும் ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு வைத்திருந்​ததற்​காக அவர் இந்​தப் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டார். எல்லை தாண்​டிய தீவிர​வாதத்​தை அரசின் கொள்​கை​யாகவே கொண்​டுள்ள ஒரு தோல்​வியடைந்த நாட்​டில்​தான்(பாகிஸ்தான்) தாவூத் பதுங்கி இருக்கிறார். இன்று வரை, தாவூத் எங்​களது நாட்டில் தேடப்​படும் குற்​றவாளியாகவே இருந்து வரு​கிறார்.

ஒசாமா பின்​லேடன் அழிக்​கப்​பட்ட அதே நாட்​டில்​தான் அவரும் பதுங்கி இருக்கிறார். மும்பை தீவிரவாத தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​கள் உட்​பட, இந்​தி​யாவில் தேடப்​படும் பல தீவிரவாதிகள் பத்​தாண்​டுகளுக்​கும் மேலாகப் பாகிஸ்தானிலேயே வசித்து வரு​கின்​றனர்.

தீவிர​வாத ஆதரவாளர்கள் தங்​களது தவறான செயல்​களை நியாயப்​படுத்​த மனித உரிமை​களை​ பயன்​படுத்​து​வது வழக்​க​மாக மாறி​விட்​டது. இந்த உண்​மையைக் குறிப்​பிடா​மல் விட்​டது வருந்​தத்​தக்​கது. இவ்வாறு அவர் கூறினார்.

📍 chennai
📰 Hindu Tamil
🕒 6 days ago

Related News

“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
நவ.12-ல் தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை கட்சியினர் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்
நவ.12-ல் தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை கட்சியினர் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡