இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் அதிகளவு வாக்குகள் பதிவு: நெதன்யாகுவுக்கு கடும் நெருக்கடி
ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தம் 120 இடங்களுக்கான தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. அங்கு மொத்தம் 73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காலை முதலே மக்கள் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்தனர். மதியம் 2 மணி வரை கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் வாக்களித்தனர். கடந்த 2022 ல் நடந்த தேர்தலின் போது மதியம் 2 மணி வரை 38 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
பிரதமர் நெதன்யாவுக்கும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.ஓராண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் போர், இஸ்ரேலில் மிகப் பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. போரை கையாண்ட விதம், பணயக் கைதிகளை மீட்பதில் ஏற்பட்ட தாமதம் போன்றவற்றால் பிரதமர் நெதன்யாகு மீது ஒரு தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நெதன்யாகு 19 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இதனால், காடி ஐசன்கோட்டுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.