முத்தரப்பு தொடர்: பாகிஸ்தானை பந்தாடியது இலங்கை 8 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி
லாகூர்: பாகிஸ்தானில் நடந்து வரும் முத்தரப்பு தொடர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 5வது ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்ய பாகிஸ்தான் வீரர்கள் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து நடையை கட்டினர். அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன், ஹாசன் நவாஜ் 17 ரன், அராபத் 10 ரன், கேப்டன் சாகின் அப்ரிடி 15 ரன்கள் எடுத்து வெளியேற மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 110 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இலங்கை தரப்பில் மடுஷ்கா 5 விக்கெட், சாகன் அர்சயா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்ைக அணியின் ஓப்பனர் கமிந்து மென்டிஸ் அரை சதமடித்த நிலையில் 62 ரன்னுடனும், ரத்னாயகே 23 ரன்னிலும் அவுட் ஆகாமல் இருக்க அந்த அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழந்து 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நாளை மறுநாள் நடக்கும் 6வது சம்பிரதாய போட்டியில் இலங்கை, இங்கிலாந்து அணிகளும், அக்.31ல் நடக்கும் பைனலில் இலங்கை- பாகிஸ்தான் அணிகளும் மோதுகின்றன.