South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்டுகளை அணைக்க ரயில்வே வாரியம் உத்தரவு

ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்டுகளை அணைக்க ரயில்வே வாரியம் உத்தரவு

புதுடெல்லி: ரயில்​களில் அசம்​பாவிதங்​களை தவிர்க்​கும் நடவடிக்கை​யாக பயணிகளின் பாது​காப்பு கருதி ரயில்​களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்​ஜிங் பாயிண்டுகளை அணைத்து வைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்​ளது.

சமீபத்​தில் தென்​கிழக்கு ரயில்​வேயில் நள்​ளிரவு நேரத்​தில் சார்ஜிங் பாயிண்​டுகளின் மின் இணைப்பு அணைக்​கப்​படா​மல் இருந்​ததால், பயணி ஒரு​வர் சார்ஜ் போட்​டுக் கொண்​டிருந்த பவர் பேங்க் வெடித்து புகை மூட்​டம் ஏற்​பட்​டது.

இந்த சம்​பவத்​தைத் தொடர்ந்து, கடந்த அக்​டோபர் 26 அன்று ரயில்வே வாரியம் அனுப்​பியுள்ள சுற்​றறிக்​கை​யில், “இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை எந்​த​வித விதி​விலக்​கும் இன்றி சார்​ஜிங் பாயிண்​டுகள் அணைக்​கப்​படுவதை அதி​காரி​கள் உறுதி செய்ய வேண்​டும். ஊழியர்​கள் இதைச் சரியாகப் பின் பற்றுகிறார்​களா என்​பதை அறிய அதி​காரி​கள் மற்​றும் மேற்பார்வை​யாளர்​கள் மட்​டத்​தில் திடீர் சோதனை நடத்​தப்​பட வேண்​டும்” என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இரவு நேரங்​களில் கவனிக்​கப்​படாத மொபைல் போன்​கள், பவர் பேங்க்​கு​கள் சூடாகி வெடிப்ப​தன் மூலம் தீ விபத்து ஏற்​படுவது மட்டுமின்றி, பயணிகள் தூங்​கும் நேரத்​தில் மொபைல் போன்​கள் திருடப்​படுவதையும் தடுக்க இந்த நடைமுறை உதவும் என ரயில்வே நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. ஏசி மற்​றும் ஸ்​லீப்​பர் பெட்டிகளில் பயணிகள் அறியும் வகை​யில், இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்​ஜிங் பாயிண்ட் செயல்​படாது என்ற விழிப்​புணர்வு ஸ்​டிக்​கர்​களை ஒட்​ட​வும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

📍 chennai
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது
சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது
விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம்: கட்கரி
விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம்: கட்கரி
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡