இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக ஒன்றிய அரசு தகவல்
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் 41,664, பாரத் பெட்ரோலியம் 24,605, இந்துஸ்தான் பெட்ரோலியத்துக்கு 24,418 பங்க்குகள் உள்ளன. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக பெட்ரோல் பங்க்குகளை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.