நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி முர்மு பயணம்
புதுடெல்லி:ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து வரலாறு படைத்துள்ளார். மறைந்த அப்துல் கலாமிற்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவா,கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.