சென்னையில் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டினால் டன்னுக்கு ரூ.5,000 அபராதம்
சென்னை: பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மண்டல உதவி ஆணையர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையின் முக்கிய சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், நீர்நிலைகள், திறந்த வெளிகள் மற்றும் காலி இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மாநகராட்சி கவனத்துக்கு வந்துள்ளது.