இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதில் புதிய சிக்கல்! வெளியான முக்கிய அறிவிப்பு!
கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு போட்டி என்றால், அது இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான். நாளை பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலக கோப்பையில் மோத உள்ளன. இந்த போட்டி நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், பாகிஸ்தான் அணி விளையாடுவோம் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி நடப்பதில் மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கொழும்புவில் நாளை ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பலரும் சோகத்தில் உள்ளனர்.