... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#சந்திரகிரகணம்: பழனி கோவிலில் 3-ந்தேதி பூஜை நேரம் மாற்றம்

சந்திரகிரகணம்: பழனி கோவிலில் 3-ந்தேதி பூஜை நேரம் மாற்றம்

சந்திரகிரகணத்தை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 3-ந்தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. 

இதனை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் அன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும். உச்சிகால பூஜை முடிந்தவுடன் மதியம் 1 மணிக்கு அனைத்து சன்னிதிகளும் திருக்காப்பிடப்படும். 

அன்றைய தினம் படிப்பாதை, விஞ்ச் மற்றும் ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 10.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திரகிரகணம் முடிந்த பிறகு மாலை 7 மணிக்கு ஸம்ப்ரோச்சனை பூஜை தொடர்ந்து சாயரட்சை, தங்கரத புறப்பாடு, பின் அர்த்தசாம பூஜையுடன் சன்னிதி திருக்காப்பிடப்படும். 

மறுநாள் 4-ந்தேதி விசுவரூப தரிசனத்திற்கு பிறகு வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : Malaimalar

2 days ago

Home Flash News