சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது பாகிஸ்தான்: இலங்கைக்கு எதிராக ஆறுதல் வெற்றி! - T20 WC 2026
கண்டி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இலங்கையை 5 ரன்களில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த பிரிவில் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதனால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த ஆட்டம் இலங்கையில் கண்டி நகரில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
கோலி சாதனை முறியடிப்பு:
இந்தப் போட்டியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிக ரன்களைக் குவித்து இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி 319 ரன்கள் குவித்திருந்தார். அந்த சாதனையை இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஃபர்ஹான் 383 ரன்கள் எடுத்து முறியடித்தார்.