... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#டி20 உலக கோப்பை: கோலி, ரோகித்தை முந்தி புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்

டி20 உலக கோப்பை: கோலி, ரோகித்தை முந்தி புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்

அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய அணி அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. 
ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. 
அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சஞ்சு சாம்சனின் இந்த அபார ஆட்டத்தின் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு அவர் முன்னேறினார். 2010 ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 101 ரன்கள் குவித்த சுரேஷ் ரெய்னா ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். 
தற்போது 97* ரன்கள் அடித்து 2வது இடத்திற்கு சஞ்சு சாம்சன் முன்னேறினார். 92 ரன்களுடன் ரோகித் 3 ஆம் இடத்திலும் 89 ரன்களுடன் கோலி 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.

Source : Malaimalar

1 day ago

Home Flash News