சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை நாளை 10 மணி நேரம் அடைக்கப்படும் -தேவஸ்தானம்
நடப்பாண்டில் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ஆம் தேதி பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை அடைக்கப்படும் என்றும், கோயில் தூய்மை செய்யப்பட்டு இரவு 8.30 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சர்வ தரிசனத்திற்கான டோக்கன் இன்றும், நாளையும் வழங்கப்படாது என்றும், மார்ச் 4ஆம் தேதி சர்வ தரிசன டோக்கன் வழக்கம்போல வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 3ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.