... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பிஎம் கிசான் திட்டம் : ஒரு பைசா கொடுக்க வேண்டாம்! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு 6000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுக்கிறது. இத்திட்டத்தில் உண்மையான விவசாயிகள் பலனடைவதை உறுதி செய்ய மத்திய அரசு கேஒய்சி அப்டேட், விவசாய தனித்துவ அடையாள எண் பெறுவது உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளது. இதனை பின்பற்றும்விவசாயிகளுக்கு மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 இம்முறை கிடைக்கும். இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிஎம் கிசான் திட்டம் அப்டேட்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள் பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்ககம் திட்டம் (Agri Stack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்ய கால் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஆனால் இதுநாள்வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 22781 பட்டாதாரர்கள் மட்டுமே மேற்படி திட்டத்தில் பதிவேற்றம் முடித்துள்ளார்கள். இன்னும் 30 சத விவசாயிகள் இன்னும் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணையாமல் உள்ளனர். ஆகவே பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவண விவரங்கள், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணிணி சிட்டா, பட்டா கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கள் அலுவலர்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது நில உடைமை ஆவண விவரங்களை விடுபாடின்றி வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணைக்கும் பணியினை உடன் முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டாம்

2025-26 -ஆம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித் திட்டம் (PMKISAN) பிரதம மந்தரி பயிர்க் காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம் என்பதால் விவசாயிகள் தங்களது கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் (அ) கிராம நிர்வாக அலுவலகங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணிணி சிட்டா, பட்டா, கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : Zee News Tamil

1 day ago

Home Flash News