சிதறிய ஈரான் போர் கப்பல்... இந்திய பெருங்கடலில் 87 பேர் பலி - 2ம் உலகக் போருக்கு பின் முதல்முறை
IRIS Dena, Iran Warship Sank By US Submarine: இந்திய பெருங்கடலில், இந்தியாவில் இருந்து பயிற்சி முடித்து திரும்பிய ஈரானின் போர் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியது. இதனால், ஈரான் போர் கப்பல் கடலில் மூழ்கியதில் சுமார் 87 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயகம் திரும்பும் வழியில் தாக்குதல்...
ஈரானின் போர் கப்பலான IRIS Dena, கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தது. MILAN என்றழைக்கப்படும் பல தரப்பு கடற்படை பயிற்சிக்கு அப்போர் கப்பல் இந்தியா வந்துள்ளது. அந்த வகையில், இன்று (மார்ச் 5) தாயகத்தை அடைய இருந்த IRIS Dena போர் கப்பலை அமெரிக்கா நேற்று (மார்ச் 4) தனது நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்கி வீழ்த்தியது. 87 பேர் உயிரிழந்ததாக AFP ஊடகம் செய்தி வெளியிட்ட நிலையில், அமெரிக்கா இன்னும் உயிரிழப்பு எண்ணிக்கை அறிவிக்கவோ அல்லது உறுதிசெய்யவோ இல்லை. ஆனால், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல், ஈரான் போர் கப்பலை வீழ்த்தியதை அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இதுவே முதல்முறை.
பீட் ஹெக்செத் இதுகுறித்து கூறுகையில், "சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக கருதிய ஈரானிய கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை தாக்கி வீழ்த்தியது. நீர்மூழ்கி கப்பலின் குண்டு தாக்கி, அந்த கப்பல் வீழ்த்தப்பட்டது" என்றார். இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல்முறையாக எதிரி கப்பலை டார்பிடோ (நீர்மூழ்கி கப்பலின் குண்டு) மூலம் வீழ்த்துவது இதுவே முதல்முறை என்றும் ஹெக்செத் தெரிவித்தார்.