தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு
டெல்லி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவித்துள்ளார். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு எட்டப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டது. கிறிஸ்டோபர் திலக் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பதவி வகித்து வருகிறார். திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
தமிழ்நாடு உள்பட 5 மாநில ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ். சத்தீஸ்கர் - புலோ தேவி நேதம்; ஹரியானா - கரம்வீர் சிங் பௌத்; ஹிமாச்சலப் பிரதேசம் - அனுராக் ஷர்மா; தமிழ்நாடு - எம்.கிறிஸ்டோபர் திலக்; தெலங்கானா - அபிஷேக் மனு சிங்வி; வேம் நரேந்தர் ரெட்டி ஆகியோ நியமனம்
தமிழகத்தில் மார்ச் 2026-ல் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) செயலாளரான கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.