சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். கடந்தாண்டு ஜூலையில் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றவர் இன்று தனது கடைசி வழக்கை விசாரித்தார். கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.