... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#தனியார் பள்ளிகளில் இனி அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை

தனியார் பள்ளிகளில் இனி அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை: அரசாரணை வெளியீடு

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளுக்கு நடத்த அதிரடி தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மதம் தொடர்பான பிரச்சாரங்களோ அல்லது அரசியல் கூட்டங்களோ நடத்தப்படுவதாகப் தொடர்ந்து புகார்கள்வந்த வண்ணம் இருந்தன. இதனால் மத மோதல் உள்ளிட்ட சில விரும்பதாக சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதன்படி மதவாதத்தைத் தூண்டும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சாதி, இனம், மொழி அடிப்படையில் மாணவர்களிடையே கசப்புணர்வை உருவாக்கும் வகையிலோ எந்தச் நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் கலாச்சார விழாக்கள், ரத்த தான முகாம்கள் மற்றும் சமூக சேவை தொடர்பான நிகழ்ச்சிகளைப் பள்ளிகளில் நடத்தலாம். ஆனால், அவை மதச்சார்பற்ற முறையிலும், எந்தவொரு அரசியல் சாயமும் இல்லாமலும் நடத்தப்பட வேண்டும். மேலும், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னதாக உரிய அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

Source : Kumudham News

1 hour ago

Home Flash News