... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
# சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை - முதலமைச்சர் உத்தரவு!

Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை - முதலமைச்சர் உத்தரவு!

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கணிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. சமூக வலைத்தளத்தால் உண்டாகும் புகழ் மோகம் பிறந்த குழந்தைக்கு கூட கணக்கு தொடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய மாநில முதலமைச்சர் சித்தராமையா, மொபைல் போன் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனத்தால் ஏற்படும் உடல்நலம், மன மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதித்த பின்னர் கர்நாடகா அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகள் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கவும் இந்த அரசு விரும்புகிறது. 

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கு கவனத்தில் கொள்ளக்கூடிய அளவுக்கு மிக கொடூரமானது எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகா அரசின் இந்த முடிவு மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அவரின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கணிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. சமூக வலைத்தளத்தால் உண்டாகும் புகழ் மோகம் பிறந்த குழந்தைக்கு கூட கணக்கு தொடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவிடப்படுகிறது. லைக்குகள், கமெண்ட்கள் போன்றவை குறைவாக வந்தால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

Source : ABP Desam

2 hours ago

Home Flash News