... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#கமெனியின் மகனை ஏற்க முடியாது

கமெனியின் மகனை ஏற்க முடியாது- ஈரானின் புதிய உச்ச தலைவரை நான்தான் தேர்வு செய்வேன்..! அடம்பிடிக்கும் டிரம்ப்

ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும். ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதையடுத்து ஈரானின் புதிய உச்ச தலைவராக அவரது 2-வது மகன் மொஜ்தபா கமெனி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஈரான் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனியை ஏற்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- ஈரான் தங்களது நேரத்தை வீணடிக்கிறார்கள். கமெனியின் மகன் இலகுவானவர். அயதுல்லா அலி கமேனியின் கொள்கைகளைத் தொடரும் ஒரு புதிய ஈரானியத் தலைவரை ஏற்க முடியாது. இது அமெரிக்காவை 5 ஆண்டுகளில் மீண்டும் போருக்குத் தள்ளும். எனவே ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமெனியை ஏற்க முடியாது. வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும். கமேனியின் மகன் எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாதவர். ஈரானுக்கு நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வரக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்புகிறோம்.

ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும். ஈரான் ராணுவம், புரட்சி கர காவல்படை தங்களது ஆயுதங்களை கீழே போடுமாறு அழைப்பு விடுக்கிறேன். புதிய, சிறந்த ஈரானை பெரும் ஆற்றலுடன் வடிவமைக்க எங்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஈரானுடனான அமெரிக்க போர் எவ்வளவு காலம் தொடரலாம் என்பதில் எனக்கு எந்த நேர வரம்புகளும் இல்லை. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க கூடாது. அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய அமெரிக்காவை அணுகி உள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது. அமெரிக்க ராணுவம் இஸ்ரேலிய படைகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன் திறனை ஒவ்வொரு மணி நேரமும் அழித்து வருகிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Source : Malaimalar

6 hours ago

Home Flash News