... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
கச்சா எண்ணெய் சேமிக்க பூமிக்கடியில் 3 குகைகள்!

இந்தியாவில் அவசர கால தேவைக்காக கச்சா எண்ணெய் சேமிக்க பூமிக்கடியில் 3 குகைகள்!

புதுடெல்லி: அவசர கால தேவைக்கு பயன்​படுத்​தும் வகை​யில் பூமிக்​கடி​யில் 3 ரகசிய குகை​களில் மத்​திய அரசு கச்சா எண்ணெயை சேமித்து வைத்​துள்​ளது. அமெரிக்க, இஸ்​ரேல் கூட்​டுப்​படை மற்​றும் ஈரான் இடையி​லான போர் காரண​மாக உலக நாடு​களுக்​கான கச்சா எண்​ணெய் விநியோகம் பாதிக்​கப்​பட்​டு, எரிபொருள் தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்ளது. இதற்​கிடை​யில் போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்​பட்​டாலோ, கச்சா எண்​ணெய் சப்ளை செய்​யும் நிறு​வனங்​கள் நிறுத்​திக்​ கொண்​டாலோ அவசர தேவைக்கு பல லட்​சம் டன்​கள் கச்சா எண்​ணெயை பூமிக்​கடி​யில் சேமித்து வைக்​கும் பணியை மத்​திய அரசு பல ஆண்​டு​களாக மேற்​கொண்டு வந்​தது. ஆந்​தி​ரா​வில் விசாகப்​பட்​டினம், கர்​நாட​கா​வில் மங்​களூரு, படூர் என தென்​னிந்​தி​யா​வில் 3 இடங்​களில் ரூ.4,100 கோடி செல​வில் இதற்​காக பூமிக்​கடி​யில் குகைகள் அமைக்​கப்​பட்​டன. இவற்​றில் மிகப் பழமை​யானது விசாகப்​பட்​டினத்​தில் உள்​ளது.

 இதனை பெட்ரோலிய இருப்​பு​களை பராமரிக்​கும் இந்​திய பொதுத்​துறை நிறு​வன​மான ஐஎஸ்​பிஆர் 10 ஆண்​டு​களுக்கு முன் ஏற்​படுத்​தி​யது. இந்த மூன்று குகைகளும் மொத்​தம் 5.33 மில்​லியன் மெட்​ரிக் டன் கச்சா எண்​ணெயை (40 மில்​லியன் பீப்​பாய்​கள்) வைத்​திருக்க முடியும். இது சுமார் 10 நாட்​களுக்கு நம் நாட்​டின் தேவையை பூர்த்தி செய்​யக் கூடியது. வெளிப்​புற தாக்​குதல்​கள் அல்​லது ட்ரோன் தாக்​குதல்​கள் மற்​றும் இயற்கை பேரழி​வு​களால் பாதிக்கப்​ப​டாத வகை​யில் கச்சா எண்​ணெயை இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடி​யும். பராமரிப்பு செல​வும் குறை​வாக இருக்​கும். பூமிக்கு அடி​யில் ஆழமாக இடத்​தில் சேமிப்பு கிடங்கு இருப்​ப​தால் தீ விபத்​து, எண்ணெய்க்​ கசிவு போன்ற அபா​யங்​களும் குறை​வாக இருக்​கும். மத்​திய அரசு இந்த இருப்​பு​களை இன்​னும் பயன்​படுத்​த​வில்​லை. தேவைப்​படும்​போது இதை பயன்​படுத்​தும். மாற்று ஏற்பாடுகளுக்கான கால அவகாசத்தை மத்​தி​ய அரசுக்​கு இந்​த இருப்​பு வழங்​கும்​.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News