... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#வேளாங்கண்ணி, நாகை மக்களுக்கு ஷாக் கொடுத்த தெற்கு ரயில்வே

Train service canceled : தமிழகத்தில் இனி இந்த 2 ரயில்கள் ஓடாது.! வேளாங்கண்ணி, நாகை மக்களுக்கு ஷாக் கொடுத்த தெற்கு ரயில்வே

TN Train service canceled : தமிழகத்தில் புதிய ரயில் சேவையை அறிவித்தும், புதிய வழித்தடத்தில் ரயில் சேவையை நீட்டித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாகை, வேளாங்கண்ணி பகுதியில் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரயில் சேவையில் மாற்றம்

ரயில்களில் பயணம் செய்வது தான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாதுகாப்பு, அடிப்படை வசதி, குறைந்த கட்டணம் ஆகும். எனவே தினந்தோறும் பல லட்சம் மக்கள் ரயில்களில் பயணம் செய்து வரும் நிலையில், அனைத்து ரயில்களிலும் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக அவ்வப்போது ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதும், புதிய ரயில் சேவையை அறிவித்தும் வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் சேவைகளில் சில புதிய மாற்றங்கள், புதிய ரயில்கள் அறிமுகம், சில சேவைகள் மீண்டும் இயக்கம் மற்றும் வழித்தட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்கள் வருகிற மே 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.

வேளாங்கண்ணி வரை ரயில் நீட்டிப்பு

அந்த வகையில் தாம்பரம் – காரைக்கால் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16175/16176) ரயில் சேவை பேரளம் – காரைக்கால் வழியாக மாற்றப்பட்டு வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 20 முதல் இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு பேரளம், திருநல்லாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் வழியாக அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறு வழித்தடத்தில் அதே நாளில் இயக்கப்படவுள்ளது.

புதிதாக தினசரி ரயில் அறிமுகம்

மேலும், வேளாங்கண்ணி – மயிலாடுதுறை இடையே காரைக்கால் மற்றும் பேரளம் வழியாக புதிய தினசரி பயணிகள் ரயில் (56008/56007) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் வேளாங்கண்ணியிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், திருநல்லாறு, பேரளம் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக காலை 8.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். மயிலாடுதுறையிலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.

காரைக்கால் டூ திருச்சி

அடுத்தாக திருச்சிராப்பள்ளி – வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்ட DEMU ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு, அது தற்போது திருச்சிராப்பள்ளி – காரைக்கால் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் மே 20 முதல் திருச்சியிலிருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், நாகூர், திருமலைராயன்பட்டினம் வழியாக இரவு 9.20 மணிக்கு காரைக்கால் சென்றடையும். காரைக்காலிலிருந்து திருச்சிக்கு மறுமார்க்கத்தில் அடுத்த நாள் மே 21 முதல் தொடங்கும்.

மயிலாடுதுறை – காரைக்கால் ரயில் சேவை

அதேபோல், மயிலாடுதுறை – காரைக்கால் இடையே மேலும் ஒரு புதிய தினசரி பயணிகள் ரயில் (56009/56010) சேவை தொடங்கப்படுகிறது. காரைக்காலிலிருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பேரளம் வழியாக மாலை 2.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையவுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.05 மணிக்கு காரைக்கால் சென்றடையும் என அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை ரத்து

இந்த ரயில் சேவைகளின் மாற்றத்தின் காரணமாக சில DEMU ரயில் சேவைகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதால் வேளாங்கண்ணி – நாகப்பட்டினம், நாகப்பட்டினம் – காரைக்கால் உள்ளிட்ட சில DEMU சேவைகள் 2026 மே 20 மற்றும் 21 தேதிகளில் இருந்து நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Source : ABP Nadu

1 hour ago

Home Flash News