... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#தமிழகத்தில் 8.65 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்

தமிழகத்தில் 8.65 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்

சென்னை: தமிழகத்​தில் உள்ள முதியோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் 8.65 லட்​சம் பேர் வீட்​டிலிருந்தே வாக்​களிப்​ப​தற்​கான படிவங்​கள் விநி​யோகிக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிக்க, வாக்​குச்​சாவடிக்கு வர முடி​யாத 85 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள் மற்​றும் 40 சதவீதத்​துக்கு மேல் உடல் பாதிப்​புடைய மாற்​றுத் திற​னாளி​களுக்கு வீட்​டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்​களிக்க தேர்​தல் ஆணை​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதற்​கு, தேர்​தல் அறி​விப்பு வெளி​யான நாளி​லிருந்து 5 நாட்​களுக்​குள் தொடர்​புடைய தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலருக்கு 12டி படிவம் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். தமிழகத்​தில் தற்​போது, 85 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் 4 லட்​சம் பேர், 100 வயதுக்கு மேற்​பட்ட வாக்​காளர்​கள் 2,530 பேர், மாற்​றுத் திற​னாளி​கள் 4.63 லட்​சம் பேர் என மொத்​தம் 8.65 லட்​சம் பேர் உள்​ளனர்.

இவர்​கள் தபால் வாக்கு செலுத்த ஏது​வாக, வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் தகு​தி​யுள்ள வாக்​காளர்​களின் வீடு​களுக்​குச் சென்று படிவங்​களை வழங்​கி, பூர்த்தி செய்த படிவங்​களை பெற்று வரு​கின்​றனர். வீட்​டில் இல்​லாதவர்​களின் வீடு​களுக்கு மீண்​டும் ஒரு​முறை செல்ல உள்​ளனர். 2 முறை​யும் வாக்​காளர் வீட்​டில் இல்​லை​யெனில், அவர் தபால் வாக்​களிக்க விருப்​பமற்​றவ​ராகக் கருதப்​படு​வார் என்று தேர்​தல் நடத்​தும் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். பின்​னர், இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட பிறகு, ஒவ்​வொரு​வரின் வீடு​களுக்கு சென்​று, வாக்​குச்​சாவடி அமைப்பை ஏற்​படுத்​தி, வாக்​களிக்க வைப்​ப​தற்​கான ஏற்​பாடு​களை அந்​தந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News