... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக கூடுதலாக 20% வணிக சிலிண்டர்கள் ஒதுக்கீடு: ஒன்றிய அரசு

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக கூடுதலாக 20% வணிக சிலிண்டர்கள் ஒதுக்கீடு: ஒன்றிய அரசு

டெல்லி: அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக கூடுதலாக 20% வணிக சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஈரான் போருக்கு முன்பிருந்த அளவில் 70% அளவுக்கு வணிக சிலிண்டர்கள் தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கூடுதலாக கிடைக்கும் சிலிண்டர்களை ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்க அறிவுரை வழங்கியது. மேலும் இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "பல்வேறு துறைகளுக்கான வீட்டு உபயோகம் அல்லாத எல்.பி.ஜி ஒதுக்கீடு தொடர்பான முந்தைய கடிதங்களின் (கடித தேதிகள்: 16.03.26, 18.03.26 மற்றும் 21.03.26) தொடர்ச்சியாக இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. இதன் விளைவாக, மாநிலங்களுக்கு நெருக்கடிக்கு முந்தைய ஒதுக்கீட்டில் 40% வழங்கப்பட்டுள்ளது. மேலும், குழாய் வழி இயற்கை எரிவாயுவை (PNG) ஊக்குவிப்பதற்கான சில சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் கூடுதலாக 10% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பல மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயல்படுத்தி, அந்த 10% கூடுதல் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Source : Dinakaran

2 hours ago

Home Flash News