IPL 2026: தொடர்ந்து சொதப்பும் அபிஷேக் சர்மா.. தவறை சுட்டிக்காட்டிய அஸ்வின்! முழு விவரம்
Abhishek Sharma Poor Form IPL: 2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சொதப்பும் அபிஷேக் சர்மா அந்த அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் அபிஷேக் சர்மா மற்றும் டிரவிஸ் ஹெட் களமிறங்கினர். அதிரடி வீரர்களான இவர்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணையாக பார்க்கப்படுகின்றனர். இந்த சூழலில், முதல் போட்டியிலேயே இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக அபிஷேக் சர்மா 8 பந்துகள் எதிர்கொண்டு 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அடித்த போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்த போடியாக ஏப்ரல் 2 ஆம் தேதி வியாழக்கிழமை அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
2024ல் இறுதி போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் பேட் கம்மின்ஸ் தலைமையில் சிறப்பாக விளையாடிய சன்ரைசஸ் ஹைதராபாத், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆனால் ஜஸ்ட் மிஸ்ஸில் கோப்பையை தவறவிட்டது. அப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த எஸ்ஆர்ஹெச் அணி 113 ரன்களை மட்டுமே அடித்தது. 114 ரன்கள் என்ற இலக்கை அந்த அணி 103 ஓவர்களிலேயே அடித்து அபார வெற்றியை பெற்று கேகேஆர் அணி கோப்பையை கைப்பற்றியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம் டிராவிஸ் ஹெட், அனிகேத் வர்மா, ஸ்மரன் ரவிச்சந்திரன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டோன், கமிந்து மெண்டிஸ், ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், கிரைன்ஸ் ஃபுலெட்ரா, அமித் குமார், அமித் குமார், அமித் குமார், எமித் குமார் படேல், ஜெய்தேவ் உனட்கட், எஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி, ஷிவம் மாவி, பிரைடன் கார்சே, டேவிட் பெய்ன், சாகிப் ஹுசைன், ஓன்கர் தர்மலே, பிரஃபுல் ஹிங்கே