அஜித்துடன் மூன்றாவது முறை கூட்டணி..ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்
GV Prakash : ஜிவி பிரகாஷ் நடிப்பில் மார்ச் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியாக்கிய படம் ஹேப்பி ராஜ். தந்தை மகன் இடையேயான பாசத்தை விளக்கும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ், மரியம் ஜார்ஜ், மதுரை முத்து உட்பட திரைப்பட குழுவினர் பலர் மதுரை செல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய கோபுரம் திரையரங்கிற்கு வருகை தந்து ரசிகர்களுடன் சிறிது நேரம் படம் பார்த்தனர்.
முன்னதாக திரைப்படத்தில் நடித்துள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் மதுரை முத்து உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, “மதுரை மக்களுடைய அன்பு பாசம் வரவேற்பு உள்ளிட்டவைகளை பார்த்தது மகிழ்ச்சி என்றார். மேலும், “மதுரை மண்ணின் மைந்தன் மதுரை முத்து அவர்களின் நகைச்சுவை உணர்வு எங்களை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது. அதேபோல தற்போது இங்கே அளிக்கப்பட்ட வரவேற்பும் எங்களை வியப்படைய செய்கிறதுஆடுகளம் போன்று மதுரையின் கதைக்களமாக, மதுரைக்கு ஏற்ற வைபோடு வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக இசையமைப்பேன்” என்று கூறினார்.
குட் பேட் அக்லி திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்று நல்ல வரவேற்பினை பெற்ற படங்களுள் ஒன்றாகும். இந்த படத்திற்கு பிறகு, அஜித் இன்னும் வேறு எந்த படத்திலும் சைன் செய்யவில்லை. தொடர்ந்து ரேசிங்கில் பிசியான ஆளாக வலம் வருகிறார். இவர், தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதால் எந்த தயாரிப்பாளரும் இவரை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை. அதைத்தாண்டி, குட் பேட் அக்லி படமும், எதிர்பார்த்த அளவிலான வியாபார வெற்றியை தரவில்லை என்பதால், தயாரிப்பு நிறுவனங்களும் தயங்கி வருகின்றன. இந்த சான்ஸை உபயோகித்துக்கொண்டு அவர் கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவரது படம் குறித்து ஒரு பாசிடிவ் சைன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.