... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி துறையூரில் ஆர்ப்பாட்டம்

அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி துறையூரில் ஆர்ப்பாட்டம்

அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி துறையூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட அஇஅதிமுக வேட்பாளர் பட்டியலில் தேவேந்திர குல வேளாளர்கள் சமூகம் அதிகம் வசிக்கும் திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டன்றத் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து இன்று துறையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கலந்துகொண்டு, மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், இந்த தொகுதியில் 60000-க்கும் அதிகமாக வாழும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதிநிதித்துவம் வழங்கி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்தத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதில் திருச்சி மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Source : Smacy News

1 hour ago

Home Flash News