... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#புழுதிவாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேர் மீட்பு

புழுதிவாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேர் மீட்பு: ரயில்வே அவசர எண் இயங்கவில்லை என குற்றச்சாட்டு

சென்னை: ஆதம்​பாக்​கம் பகு​தி​யில் வசிப்​பவர் சங்​கர். இவரது மனைவி சாந்​தி. இவர்​கள் இரு​வரும் நேற்​று ​முன்​தினம் திரு​வல்​லிக்​கேணி​ சென்​றனர். பின்​னர், அங்​கிருந்து பறக்​கும் ரயில் மூலம், ஆதம்​பாக்​கம் அருகே அமைந்​துள்ள புழுதிவாக்கம் ரயில் நிலை​யத்​துக்கு இரவு 9:30 மணிக்கு வந்​தனர். அங்​கிருந்து இரு​வரும் மின் தூக்கி (லிஃப்ட்) மூல​மாக கீழே இறங்க முடிவு செய்​தனர். அங்கு ஏற்​கெ​னவே, 15 பேர் காத்திருந்​தனர். அவர்​கள் அனை​வரும் மின்​தூக்கி வந்​தவுடன் அதில் ஏறினர்.

மின்​தூக்கி புறப்​பட்ட சில நொடி​யில் 2-வது மாடிக்​கும் - முதல் மாடிக்​கும் இடையே பாதி​யிலேயே நின்​றது. இதில் பயணம் செய்த 17 பேரும் சிக்​கித் தவித்​தனர். மேலும், உதவி கேட்டு குரல் எழுப்​பினர். இருப்​பினும் யாரும் வரவில்​லை. இதையடுத்​து, தெற்கு ரயில்வே நிர்​வாகத்​துக்​கும், மின் தூக்​கி​யில் ஒட்​டப்​பட்​டிருந்த அவசர உதவி எண்​ணுக்​கும் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்​தனர். ஆனால், எந்​த​வித உதவி​யும் கிடைக்​க​வில்​லை.

இதைத் தொடர்ந்​து, சங்​கர் செல்​போன் மூல​மாக, தனது நண்​பரை அழைத்து அவர் மூலம் காவல்​துறை அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி​வித்​தார். இதன்​பேரில், அடுத்த 15 நிமிடத்​தில், வேளச்​சேரி தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி நிலைய அதிகாரி பிர​பாகரன் தலை​மையி​லான 5 தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி வீரர்​கள் புழு​தி​வாக்​கம் ரயில் நிலை​யத்​துக்கு வந்​தனர்.

மின்​தூக்​கி​யில் ஒட்​டப்​பட்ட உதவி எண்​ணும் இயங்​க​வில்​லை. சிறிது தாமதம் ஏற்​பட்டு இருந்​தால் கூட விபரீதம் ஏற்​பட்​டிருக்​கும். ரயில்வே நிர்​வாகம் இனிமேலா​வது கவன​மாக செயல்​பட​வேண்​டும். ரயில் நிலை​யத்​தில் பயணி​களின் அடிப்​படை வசதி​களை முறை​யாக பராமரிக்க வேண்​டும். அப்​போது தான் இது​போன்ற பிரச்​சினை ஏற்​ப​டா​மல் தவிர்க்க முடி​யும்” என்​றனர். இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​யிடம் கேட்​ட​போது, ``மின்​தூக்கி தான் பிரச்​சினை. இதை பராமரிக்​கும் தனி​யார் நிறு​வனத்​துக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. விரை​வில் இப்​பிரச்​சினைக்கு தீர்வு காணப்​படும்'' என்​றார்.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News