... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் நீக்கம்: நயினார் நாகேந்திரன் நடவடிக்கை

தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் நீக்கம்: நயினார் நாகேந்திரன் நடவடிக்கை

சென்னை: தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன், கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, ராசிபுரம், ராமநாதபுரம், பத்மநாபபுரம், மானாமதுரை, குளச்சல் ஆகிய தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது.

பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கட்சி தலைமை ஆலோசித்து வந்தது. பாஜ மாநில தலைவர் மட்டும் தான் இந்த முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதே போல மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவருடன் தமிழிசை சவுந்தரராஜனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால், அவர் தான் மயிலாப்பூரில் வேட்பாளராக போட்டியிட போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் கட்டுப்பாட்டை மீறியதாலும், R.முரளீதரன், கட்சியின் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.தேர்தல் செய்திகள்

Source : Dinakaran

2 hours ago

Home Flash News